பாசிப்பருப்பு இட்லி

width="200"


தேவையானவை:

பச்சரிசி - அரை கப் 
பாசிப்பருப்பு - அரை கப்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி
சமையல் சோடா - கால் டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

• அரிசி,  பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைத்து, இட்லி மாவு பதத்தில் அரைத்துக்கொள்ளவும்.

• உப்பு சேர்த்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.

• மறுநாள் சமையல் சோடா சேர்த்துக் கலக்கி, இட்லித் தட்டில் ஊற்றி இட்லிகளாக எடுக்கவும்.

• சத்தான இந்த பாசிபருப்பு இட்லியை காரச் சட்னியுடன் பரிமாறவும்.




வெஜிடபிள் ஆம்லெட்

width="200"

தேவையானவை:-
 
முட்டை- 2 (வெள்ளைக்கரு மட்டும்).
 
துருவிய கேரட், கோஸ், பொடியாக நறுக்கிய பீன்ஸ் சேர்ந்த கலவை- கால் கப்
 
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி- 2 டீஸ்பூன்.
 
மிளகுத்தூள்- கால் டீஸ்பூன்.
 
சீரகத்தூள்- கால் டீஸ்பூன்.
 
பொட்டுக்கடலை பொடி- 2 டீஸ்பூன்.
 
பால்- 2 டீஸ்பூன்.
 
ஆலிவ் ஆயில்- ஒரு டேபிள்ஸ்பூன்.
 
செய்முறை:
 
• ஆலிவ் ஆயில் நீங்கலாக மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
 
தோசைக்கல்லை காயவைத்து கரைத்த மாவை சிறிய ஆம்லெட்டுகளாக ஊற்றி சுற்றிலும் ஆலிவ் ஆயில் விடவும்.மறுபுறம் திருப்பிப் போட்டு நன்றாக வேக விட்டு எடுக்கவும்.
 
• வெறும் ஆம்லெட் மட்டும் சாப்பிட்டு பழகிய குழந்தைகளுக்கு இப்படி காய்கறிகள் கலந்து செய்து கொடுப்பதால் வைட்டமினும், நார்ச்சத்தும் அதிகமாக கிடைக்கும். சுவையும் வித்தியாசமாக இருக்கும்.




உளுந்தங்களி

width="200"


தேவையான பொருட்கள்....
 
கறுப்பு உளுந்து - 1 கைப்பிடி
கருப்பட்டி - தேவையான அளவு
 
செய்முறை...  
 
• கடாயில் கறுப்பு உளுந்தை போட்டு பொன்னிறமாகி, வாசனை வரும் வரை வறுத்து, அரைத்து மாவாக்கிக் கொள்ளவும்.
 
• பின்னர் கருப்பட்டி பாகு காய்ச்சி அதோடு உளுந்து மாவு சேர்த்து நல்லெண்ணெய் விட்டு கிளறி இறக்க வேண்டும்.
 
• தண்ணீர் படாமல் இருந்தால் 3 நாள்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
 
குறிப்பு....
 
குழந்தைகளின் உடல் வளர்ச்சி, உறுதிக்கு தேவையான கால்சியம், புரோட்டீன் போன்றவை இதில் உள்ளது. பெண்கள் சாப்பிட்டால் கர்ப்பப்பை பலம் பெறும். இடுப்பு வலியும் வராது. ஆண்களுக்கு உடல் உறுதியை தருவதோடு, குழந்தையின்மை பிரச்சினைக்கு நல்ல தீர்வை தரும்.
 
ஆனால் 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள், ஒருநாள் 50 கிராமுக்கு மேல் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் எளிதாக செரிக்காது. இது பெரும்பாலானவர்களால் விரும்பி உண்ணப்படுவது.
 
உளுந்து, கருப்பட்டி, செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ஆகியவற்றால் இது தயாரிக்கப்படுகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் உண்ணுவதற்கு உகந்த சத்தான இனிப்பு உணவு இது. இதை நீங்களே வீட்டில் தயாரித்து உண்ணலாம்.




அருகம்புல் கஷாயம்

width="200"


தேவையான பொருட்கள்...
 
அருகம்புல் - 1 கப்
மிளகு - 1 ஸ்பூன்
 மஞ்சள், இஞ்சி - சிறிதளவு
 
செய்முறை....
 
• அருகம்புல்லை நன்றாக கழுவிக்கொள்ளவும்.
 
• மேலே சொன்ன பொருட்களை எல்லாம் நன்கு இடித்து மண்சட்டியில் போட்டு அதில் நான்கு மடங்கு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
 
• தண்ணீர் நன்கு வற்றி ஒரு பங்காக வற்ற வைத்து பருகவும். இந்த கஷாயத்தை சூடாகவும் பருகலாம், ஆற வைத்தும் பருகலாம்.
 
பலன்:
 
இது ரத்தத்தை சுத்தப்படுத்தும். நாம் அன்றாடம் உணவு உண்கிறோம். ஒருசில உணவுகளால் உடலுக்கு நல்லது மட்டுமின்றி சில கெடுதல்களும் நேரும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் அருகம்புல் கஷாயம் பருகினால் அந்த கெடுதல்கள் உடலில் தங்காது. ரத்தம் சுத்தம் செய்யப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். தோல் நோய்கள் வருவதையும் இந்த கஷாயம் தடுக்கும்.




பார்லி இட்லி

width="200"


தேவையான பொருட்கள்...
 
இட்லி அரிசி - 1 கப்
பார்லி - 1 கப்
உளுந்து - அரை கப்
வெந்தயம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை....
 
• அரிசியையும், பார்லியையும் ஒன்றாகவும், உளுந்தையும், வெந்தயத்தையும் தனியாகவும் 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
 
• முதலில் வெந்தயம் உளுந்து இரண்டையும் மையாக அரைத்து விட்டு, அரிசியையும் பார்லியையும் ஒன்றாக அரைத்து இரண்டையும் சிறிது உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.
 
• பின்னர் இட்லியாக ஊற்றி எடுக்கவும்.
 
• இந்த இட்லி மிகவும் சத்தானது.




கார தோசை


தோசைன்னாலே நமக்கெல்லாம் ஒரே குஷிதான்.. அதிலும் கார தோசைன்னா கேட்கவே வேணாம்.. சரி, இப்போ காரதோசை செய்றது எப்புடினு பார்க்கலாமா....

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1/2 கப்
துவரம்பருப்பு - 1/4 கப்
தேங்காய் - 1/2 முடி
மிளகாய் - 4 
சீரகம் - 1/2  டீஸ்பூன்
மிளகு - 10
உப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறு துண்டு
மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* அரிசி, பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிய ரவை பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.

* எண்ணெயில் கடுகு தாளித்து, அரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி கலக்கவும்.

* தேவையெனில் சிறிது தண்­ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.

* தோசை கல்லில் மாவை ஊற்றி தோசை வார்க்கவும்.

* மாவு மீந்து விட்டால், அடுத்த முறை தோசை ஊற்றும்போது மீந்த மாவில் பொடியாக அரிந்த வெங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து தோசை வார்க்கவும்.


டயட் அடை

width="200"


தேவையான பொருட்கள்.....

கொள்ளு - கால் கப்
பார்லி - கால் கப்
வெள்ளை சென்னா - கால் கப்
புழுங்கல் அரிசி - கால் கப்
வால் நட்  - கால் கப்
ராகி மாவு - ஒரு மேசை கரண்டி
இஞ்சி - ஒரு அங்குல‌ துண்டு
பூண்டு - 3 ப‌ல்
ப‌.மிள‌காய் - 2
கொத்து ம‌ல்லி, புதினா, க‌ருவேப்பிலை - சிறிது
சின்ன‌ வெங்காய‌ம் ‍ - 6
உப்பு - தேவைக்கு
ஆலிவ் ஆயில் -  2 ஸ்பூன்

செய்முறை.....

• கொத்து ம‌ல்லி, புதினா, க‌ருவேப்பிலை, சின்ன‌ வெங்காய‌ம், ப‌.மிள‌காய் அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• கொள்ளு, வெள்ளை சென்னா , அரிசியை இரவே ஊற போடவும்.

• பார்லி அரைப்பதற்கு ஒரு மணி நேரம் முன் ஊறவைக்கவும்.

• வால் ந‌ட்டை ஒரு ம‌ணி நேர‌ம் முன் கொதிக்கும் வெண்ணீரில் ஊற‌வைத்து தோலெடுக‌க்வும்.

• அரைக்கும் போது பூண்டு, இஞ்சியை சேர்த்து அரைத்து கொள்ள‌வும்.

• அரிசியை போட்டு ந‌ன்கு அரைத்து மீதி உள்ள‌ கொள்ளு, வெள்ளை சென்னா,  பார்லி,  வால் ந‌ட்டை,  பொருட்க‌ளையும் முக்கால் ப‌த‌த்திற்கு அரைக‌க்வும்.

• அரைத்த‌ க‌ல‌வையில் வெங்காய‌ம், கொத்து ம‌ல்லி, புதினா, க‌ருவேப்பிலையை சேர்த்து நன்கு கலக்கவும்.

• இந்த கலவையை தோசைக‌ளாக‌ கொஞ்ச‌ம் ஆலிவ் ஆயில் தெளித்து சுட்டெடுக்க‌வும்.




 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India